Pages

Wednesday, May 30, 2012

சட்டப் படிப்பிற்கான கவுன்சிலிங் - ஜூன் 30 ம் தேதி துவங்குகிறது!

பி.ஏ.பி.எல்., பட்டப் படிப்புக்கு, மாணவர் சேர்க்கை "கவுன்சிலிங்", ஜூன் 30ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து, அம்பேத்கர் சட்டப் பல்கலை துணைவேந்தர் விஜயகுமார் கூறியதாவது: சென்னை, அம்பேத்கர் சட்டக் கல்லூரி உள்ளிட்ட, ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில், 2012 - 13ம் கல்வியாண்டுக்கான, ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., (ஹானர்ஸ்), பி.ஏ.பி.எல்., மற்றும் மூன்றாண்டு பி.எல்., (ஹானர்ஸ்), பி.எல்., பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இதற்கான விண்ணப்பங்கள், 28ம் தேதி முதல் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ள, அரசு சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலையிலும் விண்ணப்பங்களை பெறலாம்.
ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., பட்டப் படிப்பிற்கு, 1,052 பேரும், பி.ஏ.பி.எல்., (ஹானர்ஸ்) பட்டப் படிப்பிற்கு 120 பேரும், மூன்றாண்டு பி.எல்., பட்டப் படிப்புக்கு 1,262 பேரும், பி.எல்., (ஹானர்ஸ்) பட்டப் படிப்புக்கு, 60 பேரும் சேர்க்கப்பட உள்ளனர்.
ஐந்தாண்டு பட்டப் படிப்புக்கு விண்ணப்பங்களை ஜூன் 15ம் தேதியும், மூன்றாண்டு பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்களை ஜூன் 30ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.
பி.ஏ.பி.எல்., படிப்பிற்கு ஜூன் 30ம் தேதியும், பி.எல்., படிப்பிற்கு ஜூலை 16ம் தேதியும் "கவுன்சிலிங்" நடைபெற உள்ளது. இவ்வாறு விஜயகுமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.