தமிழகத்தில், 2 புதிய கால்நடை மருத்துவக்
கல்லூரிகள் புதிதாக துவங்கப்படவுள்ளன. இதன்மூலம், இளநிலை கால்நடை
மருத்துவப் படிப்பில் 34 இடங்கள் கூடுதலாக சேரும்.
இதுதொடர்பாக,
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பிரபாகரன் கூறியதாவது:
தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலியில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும்
விலங்கு பராமரிப்பு படிப்பிற்காக, 2 புதிய கல்லூரிகள் துவக்கப்படவுள்ளன.
இதன்மூலம், இந்தக் கல்வியாண்டில்(2012 - 13),
மாநிலத்தில், இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள், 226
என்பதிலிருந்து, 260 என்பதாக உயரும். மேலும், கால்நடை மருத்துவ படிப்பின்
மீதான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கால்நடை அறிவியல் மற்றும் மீன்வளம் ஆகிய 2
துறைகள்தான், மென்பொருள் துறையைப் போல், ஒரே அளவில் வளர்ந்து வருகின்றன.
இப்படிப்பை முடிப்பவர்களுக்கு, அரசுப் பணி கிடைக்கும் என்பதால்,
இப்படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதேசமயம், இத்துறை சார்ந்த படிப்பை
முடித்தால், தனியார் துறைகளிலும் வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு ஆண்டும்,
3700 கால்நடை மருத்துவ அறிவியல் பட்டதாரிகள் நாட்டிற்கு
தேவைப்படுகிறார்கள். ஆனால் வெறும் 1800 பட்டதாரிகள் மட்டுமே
வெளிவருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Bachelor of Veterinary Science and Animal
Husbandry, Bachelor of Fisheries Science and Animal Husbandry, BTech in
Food Processing Technology and BTech in Poultry Production Technology
போன்ற படிப்புகளுக்கான விண்ணப்ப படிவங்களை, கால்நடை மருத்துவ அறிவியல்
கல்வி நிறுவனங்களில், வரும் மே மாதம் 14ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.