Pages

Tuesday, May 15, 2012

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு ஜூலை 15க்கு பிறகு சீட்களை அதிகரிக்க கூடாது.


புதிதாக துவக்கப்படும் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கு அனுமதி வழங்குவதையோ அல்லது சீட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையோ, ஜூலை 15ம் தேதிக்குள், மத்திய அரசோ அல்லது மருத்துவக் கவுன்சிலோ முடித்து விட வேண்டும்.
அதற்குப்பின், ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும்&' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சண்டிகாரில், ஜகதல்பூர் என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், குறிப்பிட்ட காலவரை முறையை மீறியும், தகுதியான மாணவர்கள் பலர் இருக்கும் போது, விதிமுறைகளை மீறியும், கடந்த 2006-07ம் கல்வியாண்டில், இரண்டு மாணவியர் சேர்க்கப்பட்டது குறித்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் பட்நாயக், சுவாதந்தர் குமார் ஆகியோரை கொண்ட பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: புதிதாகத் துவக்கப்படும் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., பாட வகுப்புகளுக்கு அனுமதி வழங்குவதையோ அல்லது ஏற்கனவே துவக்கப்பட்ட இந்த படிப்புகளுக்கான, "சீட்&'களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையோ, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15ம் தேதிக்குள் மத்திய அரசோ அல்லது மருத்துவக் கவுன்சிலோ அல்லது பல் மருத்துவக் கவுன்சிலோ முடித்துவிட வேண்டும்.
ஜூலை 15ம் தேதிக்குப் பிறகு, அந்த கல்வி ஆண்டுக்கு அங்கீகாரமோ அல்லது ஒப்புதலோ வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால், அது அடுத்த கல்வியாண்டிற்குத் தான் செயல்பாட்டிற்கு வரும். நீதிமன்ற அவமதிப்பு அரசு, மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில் என, யாராக இருந்தாலும், ஜூன் 15க்கு பின், புதிய சேர்க்கைக்கு அனுமதித்தால், அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும்.
ஜூலை 15ம் தேதிக்கு பின், சேர்க்கை நடந்தால், அதை, அடுத்த கல்வியாண்டில் தான், நடைமுறைப்படுத்த வேண்டுமே, தவிர நடப்பு கல்வியாண்டுக்கு நடைமுறைப்படுத்தக் கூடாது. அபராதம் இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு மாணவியரின் சேர்க்கையும் சட்ட விரோதமானது என்றாலும், அவர்கள் இறுதியாண்டு படிப்பதை கருத்தில் கொண்டு, தலா ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.