Pages

Saturday, May 5, 2012

"0" பாலன்ஸ் அனுமதிக்குமாறு கிளைகளுக்கு எஸ்பிஐ உத்தரவு.


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது கிளைகளில் உள்ள அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகை (மினிமம் பாலன்ஸ்) விதிமுறையை கைவிடுமாறு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மறுஆய்வு நடந்தது. அதில் வங்கித் துறையின் பல அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, வீட்டு கடனை முன்கூட்டி திருப்பி செலுத்தினால் அபராத வட்டி கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக, 0 பாலன்ஸ் வசதியுடன் சேமிப்பு கணக்குகளை தொடங்க அனைவரையும் அனுமதிக்குமாறு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியது.


அதன் தொடர்ச்சியாக, நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தனது கிளைகளுக்கு ஏப்ரல் 25ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி எல்லா வகையான சேமிப்பு கணக்குகளிலும் மினிமம் பாலன்ஸ் விதியை நீக்கி விடுமாறு கூறியுள்ளது. இதை உடனடியாக அமல்படுத்தவும், ஏப்ரல் 25ம் தேதிக்கு பிறகு மினிமம் பாலன்ஸ் குறைந்ததாக யாருக்காவது பணம் பிடித்திருந்தால் அதை  மீண்டும் அவர்களது கணக்கில் வரவு வைக்கவும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.



இதுதொடர்பான கடிதங்கள் அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் எஸ்பிஐ தலைமை அலுவலகம் அனுப்பியுள்ளது. மேலும், இனி சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பாலன்ஸ் விதிமுறை கிடையாது என்று வாடிக்கையாளர்கள் எளிதில் பார்க்கும் வகையில் அறிவிப்பு பலகையில் இடம்பெற செய்யவும் எஸ்பிஐ வலியுறுத்தியுள்ளது.
இதுபற்றி வங்கியின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’சேமிப்பு கணக்கில் மினிமம் பாலன்சுக்காக மார்ச் 31க்கு பிறகு பிடித்தம் செய்யப்பட்ட கட்டணத்தை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சலுகையால் எங்கள் வங்கிக்கு புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்’’ என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.