பள்ளிக் கல்வித்துறையின் நடவடிக்கையால், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பல மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த 2011-12ம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்விமுறை அமல்படுத்தப்பட்டது. தற்போது பள்ளிகளில், 10ம் வகுப்பு படித்துவரும்,
11 லட்சத்து 44 ஆயிரத்து 232 மாணவ, மாணவிகளுக்கு, ஏப்ரல் 4ம் தேதி முதல், பொதுத் தேர்வு துவங்குகிறது. இவர்களுக்கான தேர்வு அறை நுழைவுச் சீட்டு, அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டது.
அதில் சில மாணவர்களுக்கு, ஹால் டிக்கெட் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, ஹால் டிக்கெட் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கலக்கமடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர், தலைமை ஆசிரியர்களை சந்தித்துக் கேட்டபோது, கடந்த மாதம் நடந்த அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை, எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கக் கூடாது என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக பதில் கூறினர்.
இதனால், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, செய்முறைத் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள், ஏப்ரல் 4ம் தேதி துவங்க உள்ள எழுத்துத் தேர்வில், பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.