மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் வழங்கப்படும் சிறப்பு பி.எட்., படிப்பை பொது பி.எட்., படிப்போடு இணையாக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பி.எட்., படிப்பில், பார்வையற்ற குழந்தைகள் உள்ளிட்ட சிறப்புக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் வகையில், சிறப்பு பாடத்திட்டம் உள்ளது.
இந்நிலையில், சிறப்பு பி.எட்., பாடப்பிரிவை பயில்பவர்களை, பொது பி.எட்., பாடத்திட்டத்திற்கு இணையானவர்களாக அறிவிக்க வேண்டும் என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கல்லூரியின் பதிவாளர், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.
இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் தலைமையிலான குழு (ஈக்வலன்ட் கமிட்டி) கூடி, சிறப்பு பி.எட்., பாடத்திட்டத்தை ஆய்வுசெய்து, &'ரெகுலர் பி.எட்., பாடத்திட்டத்திற்கு, சிறப்பு பி.எட்., பாடத்திட்டம் இணையானது&' என, தமிழக அரசுக்கு தெரிவித்தது. இதை ஏற்று, சிறப்புக் கல்வியில் பி.எட்., பட்டம் பெறுபவர்களும், பொது பி.எட்., பட்டம் பெறுபவர்களும் சம நிலையான கல்வித் தகுதியைக் கொண்டவர்கள் என, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இனி, சிறப்புக் கல்வியில் பி.எட்., பட்டம் பெறுபவர்களும், அரசு வேலை வாய்ப்புகளைப் பெற தகுதியானவர்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.