Pages

Wednesday, April 25, 2012

உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தை கண்டித்து ஏப்.27-ல் ஆர்ப்பாட்டம்.

பரமத்திவேலூர், ஏப். 24: பரமத்தி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஏப்ரல் 27-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.
சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பரமத்தி வட்டார செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி, ஆசிரியர் குறைதீர் சிறப்பு முகாம் விண்ணப்பங்களின் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தால் திருப்பப்படும் ஆசிரிய விண்ணப்பங்கள் மீது, கடிதங்கள் திருப்பப்படும் அன்றே அதன் விவரங்களைத் தகவல் பலகையில் தெரிவிக்க வேண்டும்.
உயர் கல்வித் தகுதிச் சான்றுகளின் உண்மைத் தன்மை கண்டறிதல் என்ற பெயரில், ஆசிரியர்களுக்குச் செலவினங்கள் உருவாக்குவதையும், உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை அனுமதிப்பதில் காலதாமதம் ஏற்படுவதையும் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 கூட்டத்திற்கு சங்க வட்டாரத் தலைவர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மாதேஷ் சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.