பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறையால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள், நாளை (ஏப்.,28) முதல் 66 மையங்களில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு அறைகளில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் காலை 8.30 முதல் 12.30 மணி , பிற்பகல் 1.30 முதல் மாலை 4.30 மணிவரை திருத்தப்படுகிறது.
இதில் காலை 15, பிற்பகலில் 15 விடைத்தாள்கள் திருத்த வேண்டும். திருத்துவதற்கு அவசரம் காட்டும்போது, தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
குறிப்பிட்ட கால அவகாசத்தில், அவசரமின்றி திருத்த வேண்டும் என , தேர்வுத்துறையால் ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.