Pages

Monday, April 16, 2012

கட்டாயக் கல்விச் சட்ட அமலாக்கத்துக்கு ஆசிரியர்கள் பாடுபட வலியுறுத்தல்.

கட்டாயக் கல்விச் சட்டத்தைப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் அமல்படுத்த அனைத்து ஆசிரியர்களும் பாடுபட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டணியின் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கட்டாயக் கல்விச் சட்டம் கூறும் ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரம் 1:30 என செயல்படுத்த அரசாணை வெளியிட்டு அமல்படுத்த வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள முதல்வர், வரும் கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் அனைத்து வகையான பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் ஒரே மாதிரியான சமமான விலையில்லா சீருடை வழங்க வேண்டும் என்றும் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ப. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். நீலகண்டன், மாவட்டச் செயலர் ஜெ. ஆல்பர்ட் தாஸ், ஓய்வு பெற்ற ஆசிரியர் அமைப்பின் மாநிலப் பொருளாளர் எம். மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.