இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 15 சதவீத மாணவ சேர்க்கையை ஏஐபிஎம்டி எனப்படும் அகில இந்திய மருத்துவ முதன்மைத் தேர்வு மூலமாகவே நடத்தப்படுகிறது. இந்த ஏஐபிஎம்டி தேர்வை சிபிஎஸ்இ நடத்துகிறது.
மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் முதன்மையான தேர்வாகும் இது. இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர், இந்தியாவில் எந்த இடத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரியிலும் சேர்க்கை பெறலாம்.
கல்வித் தகுதி
பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியியல், ஆங்கில பாடங்களில் தனித்தனியாகவும், ஒருங்கிணைத்தும் 50 சதவீத மதிப்பெண் எடுத்தவர்கள் (எஸ்.சி.,/எஸ்.டி. மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண் எடுத்தால் போதும்) இத்தேர்வை எழுதலாம். பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு முடிவிற்காக காத்திருப்பவர்களும் இத்தேர்வை எழுதலாம். இந்திய குடிமகனாகவும், சேர்க்கை பெறும் ஆண்டின் இறுதியில் 17 வயது பூர்த்தியானவராகவும் 25 வயதுக்குட்பட்டவராகவும் (எஸ்.சி.,/எஸ்.டி. மாணவர்கள் 30 வயதுக்குட்பட்டவராக) இருத்தல் வேண்டும். இந்த நுழைவுத் தேர்வில் தோல்வி அடைபவர்கள் அடுத்தடுத்து 2 நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் முறை : ஏஐபிஎம்டி இணையதளத்தின் மூலம் www.aipmt.nic.in விண்ணப்பத்தை ஆன்லைனிலேயே பூர்த்தி செய்து, நுழைவுத் தேர்வுக் கட்டணத்தை கிரெடிட் கார்ட் அல்லது டிடி எடுத்து அந்த எண்ணை விண்ணப்பத்தில் பதிவு செய்து அனுப்பலாம்.
நேரடி முறை : சிபிஎஸ்இ மாவட்ட அலுவலகத்திலோ அல்லது கனரா வங்கியிலேயோ விண்ணப்பக் கட்டணமான ரூ.800ஐ (எஸ்.சி.,/எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.450) செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். தபாலில் விண்ணப்பத்தை பெற விரும்புவோர், விண்ணப்பக் கட்டணத்தை டிடியாக எடுத்து தபாலில் அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.
தேர்வு முறை
இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வு இரண்டு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சரியான பதிலை தேர்வு செய்யும் வகையில் 200 கேள்விகள் அமைந்த முதன்மை நிலைத் தேர்வுக்கு 3 மணி நேரம் வழங்கப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இறுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். கேள்விக்கு பதில் அளிக்கும் வகையிலான இந்த தேர்வு 2 பிரிவாக இருக்கும். ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக 2 மணி நேரம் வழங்கப்படும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போதே கேள்வித்தாள் ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்.
தேர்வு அறிவிப்பு
பொதுவாக ஒவ்வெரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் முதன்மைத் தேர்வும், மே மாதத்தில் இறுதித் தேர்வும் நடைபெறும். இந்தியாவில் சென்னை, புதுச்சேரி, உள்பட பல்வேறு நகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியியல், ஆங்கில பாடங்களில் தனித்தனியாகவும், ஒருங்கிணைத்தும் 50 சதவீத மதிப்பெண் எடுத்தவர்கள் (எஸ்.சி.,/எஸ்.டி. மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண் எடுத்தால் போதும்) இத்தேர்வை எழுதலாம். பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு முடிவிற்காக காத்திருப்பவர்களும் இத்தேர்வை எழுதலாம். இந்திய குடிமகனாகவும், சேர்க்கை பெறும் ஆண்டின் இறுதியில் 17 வயது பூர்த்தியானவராகவும் 25 வயதுக்குட்பட்டவராகவும் (எஸ்.சி.,/எஸ்.டி. மாணவர்கள் 30 வயதுக்குட்பட்டவராக) இருத்தல் வேண்டும். இந்த நுழைவுத் தேர்வில் தோல்வி அடைபவர்கள் அடுத்தடுத்து 2 நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.