Pages

Thursday, April 5, 2012

பொறியியல் கல்லூரிகளில் இந்தாண்டு கல்வி கட்டணம் உயர்வில்லை.

கவுன்சிலிங் மூலம் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், இந்த ஆண்டு உயர்த்தப்படமாட்டாது, என, உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.
பண்ருட்டி ராமச்சந்திரன்:  மத்திய அரசு, 6,000 மாதிரிப் பள்ளிகளை துவக்க உள்ளதாகக் கூறியுள்ளது, மாநில அரசில் தலையிடுவது போன்றது. அந்த நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்கி, மாதிரிப் பள்ளிகளை துவக்குவதாக, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு திறமை இருந்தும், கட்-ஆப் மார்க் குறைந்ததால், மருத்துவம், பொறியியல் படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
வசதி இருக்கிறது என்ற காரணத்துக்காக, பல லட்ச ரூபாய் செலவு செய்து தனியார் கல்லூரிகளில் சேர்ந்து டாக்டர்கள், இன்ஜினியர்கள் என்று ஆகின்றனர். இவர்களால் சமுதாயத்துக்கு கேடு ஏற்படும். சுயநிதி கல்லூரிகளில், ஆண்டு கல்விக் கட்டணம், 32 ஆயிரத்து 500 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை 65 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென அவர்கள் கேட்கின்றனர். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் எப்படி, 65 ஆயிரம் ரூபாய் செலுத்த முடியும்.
அமைச்சர் பழனியப்பன்: கவுன்சிலிங் மூலம் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு, 32 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நீண்ட காலமாக உயர்த்தப்படவில்லை என்பதால், உயர்த்த வேண்டுமென கோரிக்கை வந்துள்ளது. ஆனால், இந்த கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என, முதல்வர் கூறியுள்ளார். எனவே, கட்டணத்தை உயர்த்தும் நிலை தற்போது இல்லை.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.