Pages

Saturday, April 21, 2012

மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு அறிவிப்பு.

இந்தியாவில் உள்ள ஏழு மத்திய பல்கலைக்கழகங்களில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு, முதுநிலைப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மத்திய பல்கலைக்கழகம் (www.cub.ac.in), ஜம்மு மத்திய பல்கலைக்கழகம் (www.cujammu.in), ஜார்க்கண்ட் மத்திய பல்கலைக்கழகம் (www.cuj.ac.in), காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகம் (www.cukashmir.ac.in), கேரளா மத்திய பல்கலைக்கழகம் (www.cukerala.ac.in), ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம் (www.curaj.ac.in), தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (www.cutn.ac.in) ஆகிய ஏழு பல்கலைக்கழங்களில் உள்ள பல்வேறு படிப்புகளில் சேர இந்தப் பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டியது அவசியம்.

மத்திய பல்கலைக்கழங்களில் உள்ள பல்வேறு பாடப் பிரிவுகளில் சேருவதற்கான தகுதி, இடங்களின் எண்ணிக்கை, தேர்வு மையங்கள், கல்விக் கட்டணம் உள்ளிட்ட தகவல்களைப் பெற சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக இணையதளங்கள் அல்லது www.cucet.co.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 11ம் தேதி முதல் ஆன்-லைன் மற்றும் நேரடியாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மே 15ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 17ம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3ம் தேதி நேரடி எழுத்துத் தேர்வும், ஜூன் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஆன்-லைன் தேர்வும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.