Pages

Saturday, April 21, 2012

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மே முதல் விண்ணப்பம் : ஜூலை 2வது வாரம் கவுன்சலிங்.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே முதல் வாரத்தில் துவங்கும் அண்ணா பல்கலை அதிகாரி ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான மேற்படிப்பு திட்டமிடல் தொடர்பான 2 நாள் கருத்தரங்கு, கண்காட்சி இந்திய தொழில் கூட்டமைப்பு(சிஐஐ) சார்பில் திருச்சியில் நேற்று தொடங்கியது. 
இதில் பங்கேற்ற அண்ணா பல்கலை கழகத்தின் பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் பேசியதாவது: பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள்  சேர்க்கைக்கான விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மே 31 வரை விண்ணப்பம் வழங்கப்படும். 58 மையங்களில் விண்ணப்பம் பெறலாம். இணையதளத்தி லும் தரவிறக்கம் செய்யலாம். பொறியியல் கவுன்சலிங் ஜூலை 2வது வாரத்தில் தொடங்கும். 1.5 லட்சம் மாணவர்களுக்கு சீட் கிடைக்கும். கவுன்சலிங்கில் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு முன் அந்த கல்லூரிகளின் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். கவுன்சலிங்கில் கல்லூரியை தேர்வு செய்த பிறகு அதை மாற்ற முடியாது. புரிந்து கொள்ளும் திறனை மாணவர்கள் வளர்த்து கொள்ளவேண்டும். வளர்த்துக்கொள்ள முடியாதவர்கள் தேர்வில் தோல்வி அடைகிறார்கள். இவர்களுக்காக அண்ணா பல்கலையில்  கவுன்சலிங் நடத்தப்பட்டு வருகிறது. தங்களின் இலக்கை அடிக்கடி ஞாபகப்படுத்தி கொள்ளுதல், நல்ல நண்பர்கள் சேர்க்கை, தோல்வியடைந்த பாடங்களில் கூடுதல் கவனம் இருந்தால்  மாணவர்களுக்கு மன அழுத்தம் வராது. தமிழகத்தில் 525 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு பல கல்லூரிகளில் ஏஐசிடிஇ கூடுதல்  சீட் ஒதுக்கி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில்நிபுணர் கள் பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.