Pages

Tuesday, April 3, 2012

பி.எப். பணம் கையாடல்-தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் முக்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழு மத்திய அரசிடம் புகார்.

தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர் அப்துல்மஜீத் கூறியதாவது:
தமிழகத்தில் 37000 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 83 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பணி காலத்துக்கு பிறகு ஓய்வு ஊதியம் பெறுவது உள்ளிட்ட நலன்களுக்காக மேற்கண்ட ஆசிரியர்கள் பி.எப் செலுத்தி வந்தனர். இது மாதம் ஒன்றுக்கு 
ரூ 210 கோடி இருக்கும். அதே போல வரி பிடித்தம் உள்ள தொகை மாதம் ஒன்றுக்கு 
ரூ500 கோடி செலுத்தி வந்தனர். கடந்த 36 ஆண்டுகளாக மேற்கண்ட ஆசிரியர்கள் செலுத்திய தொகையில் நிர்வாகத்தில் உள்ள சிலர் கையாடல் செய்துள்ளனர்.
இதன்படி திருவெறும்பூர் வட்டத்தில் ஆசிரியர்களின் பணம் ரூ74 லட்சம், தருமபுரியில்
ரூ73 லட்சம் , கம்மாவரம் ரூ40 லட்சம், நாகபட்டினத்தில் ரூ1 கோடியே 22 லட்சம் என கையாடல் செய்துள்ளனர். இந்த கையாடல் குறித்து தமிழக அரசிடம் கடந்த 19 ஆண்டுகளாக ஆசிரியர்கள் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. பலகட்டமாக போராட்டங்கள் நடத்தியும் பலன் இல்லை. இந்த கையாடல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்தும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் முக்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழு கடந்த வாரம் டெல்லி சென்றது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் , மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், இணை அமைச்சர் புரந்தேஸ்வரி ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தோம். இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அப்துல் மஜீத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.