Pages

Tuesday, April 3, 2012

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஆசிரியர்கள் புறக்கணிப்பு விருதுநகரில் போராட்டம்.

 பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் 50 மையங்களில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது. விருதுநகர் சூலக்கரை கே.வி.எஸ். மெட்ரிக் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு உட்பட 6 பாடங்களின் விடைத்தாள்களை திருத்த முதன்மை தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்கள் 100 பேர் வந்திருந்தனர். இவர்கள், விடைத்தாள் திருத்தும் பணியில் வெறும் 5 ஆண்டு அனுபவம் உள்ளவர்களை மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலராக நியமித்துள்ளதை கண்டித்து பணியை புறக்கணித்தனர்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் கூறுகையில், ‘ மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலராக குறைந்த அனுபவமுள்ள ஆசிரியர்களை நியமித்துள்ளது மூத்த ஆசிரியர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது. இப்பணிக்கு மூத்த முதுகலை ஆசிரியரை நியமிக்க வேண்டும். சென்ற முறை பிளஸ் 1 விடைத்தாள் திருத்தியதற்கான உழைப்பூதியம் ஓராண்டாக வழங்கப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.