"தமிழாசிரியர்" என்பதை, இனி, "பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)" என ஆசிரியர்கள் குறிப்பிட வேண்டும் என்று, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கு வந்துள்ள உத்தரவு: "பள்ளி உதவி ஆசிரியர்" என்பது, இனிமேல், பட்டதாரி ஆசிரியர் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இனிமேல் தமிழாசிரியர் என எழுதாமல், அதற்கு பதிலாக, பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) எனவும், அதேபோல் பிற ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்), பட்டதாரி ஆசிரியர் (வரலாறு) என, பாட வாரியாகக் குறிப்பிட வேண்டும்.
பெயர் மாற்றம் செய்யப்பட்டதையே, வருகை பதிவேடு, ஆவணங்கள் உட்பட அனைத்திலும் குறிப்பிட வேண்டும். தமிழக தமிழாசிரியர் கழக கோரிக்கைப்படி, இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Your Service is really very good.
ReplyDeleteஉடனுக்குடன் SMS மற்றும் உடனுக்குடன் PDF fileஐ தங்களுடைய வலைதளதம் தருகிறது. வாழ்த்துக்கள்.
ஆசிரியர்களை பற்றிய செய்திகளை வெளியிடும் வலைதளங்களில், நீங்கள் நம்பர் 1.
...
J.KRISHNAMOORTHY,
GHSS-VILANDAI.