Pages

Sunday, April 15, 2012

மாற்று திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் சட்டத்திருத்தம்.

கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், மாற்றுத் திறனாளி குழந்தைகளும் சேரும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வந்து, தமிழக அரசு அறிவித்துள்ளது.
கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிவடைந்த, ஆண்டு வருமானம், 2 லட்ச ரூபாய்க்குள் இருப்பவர்களின் குழந்தைகள், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் ஆகியோருக்கு,
தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இதில், மாற்றுத் திறனாளி குழந்தைகள் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், மாற்றுத் திறனாளி குழந்தைகளும், தனியார் பள்ளிகளில் சேர, வழிவகை செய்து, கட்டாயக் கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு, அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.