பள்ளி, கல்லூரி மாணவர்களை தொழிற்திறன் மிக்கவர்களாக மாற்றும் வகையில், அதுகுறித்த பாடங்கள் அமைக்கப்படும்'' என, மாநில திட்ட கமிஷன் உறுப்பினர் பாலகுருசாமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தொழிற்கல்வி படித்தாலும், அறிவியல், கலைப்படிப்புகள் படித்தாலும், மாணவர்கள் அதில் நிபுணத்துவம் பெறுவது குறைவு. வெறும் படிப்பால், மதிப்பெண்ணால் பயனில்லை. இந்தியாவில் திறமை வாய்ந்த தொழிலாளர்கள் கிடைப்பது கடினம். வரும் கல்வியாண்டிலிருந்து பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., பாடத்திட்டங்களில், தொழிற்திறனுக்கு முக்கியத்துவம் தரப்படும்.
திறன் மேம்பாட்டு திட்டம் மூலம் இது செயல்படுத்தப்படும். 12வது ஐந்தாண்டு திட்டத்தில், தமிழகத்தில் கல்விக்கென 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் அனைத்து கல்வி நிலையங்களிலும் தொழிற்திறன் படிப்புகள் துவக்கப்படும். வெறும் படிப்பாக மட்டுமின்றி, திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், இப்படிப்பு உதவும். முதற்கட்டமாக 132 தொழில்களுக்கான திறன்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்களைக் கொண்டு, இதற்கான பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. 10வது முடித்து, மேற்படிப்பு தொடர முடியாத மாணவர்களுக்கு கூட, தொழிற்திறன் பாடம் மூலம் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரப்படுகிறது. இவ்வாறு பாலகுருசாமி கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.