Pages

Saturday, April 21, 2012

ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியத்திற்கு தனி இயக்குனர்.

ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இயக்குனர் மற்றும் முதன்னை கல்வி அலுவலர் பணியிடங்களை தோற்றுவித்து, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
2010 ஆகஸ்டு 23 பிறகு பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியராக பணியை தொடர முடியும் என்பதால், இதற்காக ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி, தேர்வு முடிவுகள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
பொதுவாக இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களையும், ஆசிரியர் தேர்வு வாரியம் தான் தேர்வு செய்து பணி நியமனம் செய்கிறது. கடந்த தி.மு.க., ஆட்சியின் போது "சீனியாரிட்டி' முறையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போது இடைநிலை ஆசிரியர்களை தவிர, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களை போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்கின்றனர். தற்போது, இதன் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
தேர்வுக்காக இதுவரை 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய போட்டி தேர்வு மற்றும் முடிவுகள் வெளியிடுவதிலும் திணறும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தகுதி தேர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து, ஆசிரியர் தகுதி தேர்வை கவனிக்க, தனி இயக்குனர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் பணியிடத்திற்கு அனுமதி கோரி, அரசை ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டிருந்தது. அதன்படி, பணியிடம் தோற்றுவித்து பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதாவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பணியிடமும் விரைவில் நியமிக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.