கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் ரூ.78 கோடியில் புதிதாக 26 மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பேரவையில் இதுதொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி புதன்கிழமை கூறியதாவது: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் 44 மாதிரிப் பள்ளிகள் தொடங்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, ஏற்கெனவே 18 பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 26 ஒன்றியங்களில் இந்த ஆண்டு மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும்.
வயது வந்தோர் கல்வி மாதிரி மையங்கள்: தமிழகத்தில் கற்கும் பாரதம் எனும் எழுத்தறிவுத் திட்டம் 7 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எழுத்தறிவு பெறாத, வயதுவந்தோருக்கு முதல்முறையாக கணினி வழியாகக் கல்வி கற்க வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக 40 மையங்கள் மாதிரி வயது வந்தோர் கல்வி மையங்களாகத் தரம் உயர்த்தப்படும்.
அரசுப் பொதுத் துறை நிறுவனங்களின் உதவியோடு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு மையத்துக்கும் ரூ.2.5 லட்சம் வீதம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கணினி சார்ந்த கல்வி உபகரணங்கள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் வாயிலாக எழுத்தறிவு பெறாத 12 ஆயிரம் பேருக்கு கணினி வழியாகக் கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும் என்றார் அமைச்சர் சிவபதி.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.