தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மா. குமரேசன், மாநில அமைப்புச் செயலாளர் க. இசக்கியப்பன், சென்னை மாவட்டத் தலைவர்
கயத்தாறு ஆகியோர் 10.04.2012 அன்று இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி
ஆசிரியர்களாக உட்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை நிலை குறித்து
அறிந்துகொள்ள சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களைச் சந்தித்தனர்.
பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி)
பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்களை சந்தித்து இடைநிலை
ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை
நிலைகுறித்து கேட்டறிந்தனர். 8000 பேர் பட்டதாரி/தமிழாசிரியர் தகுதியுடன்
அரசுப் பள்ளிகளில் இருப்பதாகவும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை
கோரப்பட்டுள்ளது என்றும் இது குறித்து பள்ளிக்கல்வி செயலருக்கு தகவல்
அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வி இயக்குனர்
பள்ளிக்கல்வி இயக்குனர் நாம் வைக்கும் கோரிக்கை என்ன என்பதை கூட புரிந்து
கொள்ளாமல் நீங்கள் சொன்னதை எல்லாம் செய்யமுடியாது என்கிறார். உயர்
மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களை தொடக்கக்கல்வித் துறைக்கு அனுப்பி
வைத்துவிடுவேன் என்று கூறுகின்றார். பொறுப்புள்ள அதிகாரி இப்படி பேசுவது
மன வேதனை அளிக்கின்றது.
கோரிக்கையை புரிந்து அதன் மீது செயலர் அளவிற்கு கடித தொடர்பை
ஏற்படுத்தியவர் முந்தைய பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. பெருமாள்சாமி
அவர்கள். எனவே மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. மணி அவர்கள்
இயக்குனர் அலுவலக கடந்த கால கோப்புகளை படித்து அதன்படி எங்களுக்கு பதில்
சொல்ல வேண்டும். நாங்கள் சொன்னதை தற்போது வரை எதையும் செய்ததாக
தெரியவில்லை. நியாயமான கோரிக்கை குறித்து பரிசீலித்து எங்கள் அமைப்பை
அழைத்து பேசி நிரந்தர தீர்வு ஏற்படுத்திட முயற்சி செய்திட இயக்குனர்
அவர்களை கேட்டுக் கொண்டோம்.
பள்ளிக்கல்வி செயலர் & பள்ளிக்கல்வி அமைச்சர்
பள்ளிக்கல்வி செயலர், பள்ளிக்கல்வி அமைச்சர் ஆகியோரிடமும் இது குறித்து
கோரிக்கை மனு அளித்தோம். மானிய கோரிக்கைக்கு முந்தைய விவாத கூட்டத்தில்
கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படலாம் என தெரிகின்றது.
பின்னர் ஏப்ரல் 18-ல் நடைபெறும் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையில்
பட்டதாரி ஆசிரியர்களாக இடைநிலை ஆசிரியர்களை உட்படுத்திட வலியுறுத்தி
பேசிட கோரிக்கை மனுவை சட்டமன்றக் கட்சி தலைவர்கள், சட்டமன்ற
உறுப்பினர்களிடம் அளித்து விடைபெற்றோம்.
-க. இசக்கியப்பன்,
மாநில அமைப்புச் செயலாளர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.