இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் - அனைத்து ஆசிரியர் சங்க பொதுகுழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடந்தது. மாநில தலைவர் என். கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
மாநில செய்தி தொடர்பாளர் கார்கில் ஆர். இராஜேந்திரன், மாநில பொது செயலாளர் உதயகுமார், துணை தலைவர் அருள்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் கே.வெங்கட்ராமன் வரவேற்று பேசினார்.
மாநில பொதுசெயலாளர் எஸ்.சி.கிசன், துணை பொது செயலாளர் தாமஸ் ராக்லேண்டு, பொருளாளர் எஸ்.முனிசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :-
1 முதல் 10 வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.
ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்குக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.2 லட்சத்திற்கு பதிலாக ரூ.4 லட்சமாக உயர்த்தி அறிவித்த முதல்வருக்கு இக்கூட்டம் பாராட்டுகிறது.
அரசு ஊழியர்களின் வீடு கட்டும் கடன் வசதி ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவித்த முதல்வருக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.
சம்பள முரண்பாடு
இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 ஊதியக் குழுவின் சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குக்களை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்.
2009 ஆம் ஆண்டுக்கு பிறகு மாநில பதிவு முன்னுரிமைப்படி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும்.
மாநில அளவில் பதவி உயர்வுகள் நியமன தேதி முதல் பள்ளிக்கல்வித் துறைக்கு வழங்குவது போல் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தேனி மாவட்ட செயலாளர் சத்தியசீலன், திருச்சி மாவட்ட செயலாளர் விஜயகுமார், நெல்லை மாவட்ட தலைவர் கிருஷ்ணமுர்த்தி, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் விஜயசங்கர், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நெல்லை மாவட்ட செயலாளர் துறை பாக்கியநாதன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.