குரூப் - 4 நிலையில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்காக, 10 ஆயிரத்து 718 பேரை தேர்வு செய்யும் அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில், ஜூலை 7ம் தேதி தேர்வு நடைபெறும்.
இந்த போட்டித் தேர்வை, 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
குரூப் - 4 நிலையில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உட்பட பல்வேறு பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. மெகா தேர்வு: குரூப் - 4 நிலையில், 10 ஆயிரத்து 718 இடங்கள், குரூப் - 8 நிலையில் (செயல் அலுவலர்) 75 பணியிடங்கள் என மொத்தம், 10 ஆயிரத்து 793 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இத்தேர்வுகளுக்கு, இன்று(ஏப்ரல் 28) முதல், மே 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இரு வகையான தேர்வுகளுக்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 7ம் தேதி தேர்வு நடைபெறும்.
தேர்வு விவரம்: குரூப் - 4 தேர்வுகளை எழுதுபவர்கள், பொது அறிவுத்தாளுடன் கூடிய பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தாள் தேர்வை காலையில் எழுத வேண்டும். செயல் அலுவலருக்கான தேர்வை எழுதுபவர்கள், பொது அறிவுத்தாளுடன் கூடிய தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய தேர்வையும், மாலையில் இந்து சமயம் குறித்த மற்றொரு தேர்வையும் எழுத வேண்டும்.
எல்லாமே, ஆன்-லைன் தான்: தேர்வர்கள் அனைவரும், ஆன்-லைன் மூலமே தேர்வுக்கு பதிவு செய்ய வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கென, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள 805 இந்தியன் வங்கி கிளைகள் மற்றும் தபால் அலுவலகங்களில் உதவி மையங்களை அமைத்துள்ளது. இங்கு சென்று, இணையதளம் வழியாக, தேர்வுக்கு பெயரை பதிவு செய்யலாம்.
கட்டணம்: குரூப் - 4 தேர்வர்கள், விண்ணப்பக் கட்டணமாக 50 ரூபாயும், தேர்வுக் கட்டணமாக 75 ரூபாயும் செலுத்த வேண்டும் எனவும், செயல் அலுவலர் தேர்வை எழுதுபவர்கள், விண்ணப்பக் கட்டணத்துடன், தேர்வுக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தேர்வாணைய செயலர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.
இரு தேர்வுகளையும் எழுத விரும்புபவர்கள், விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய், தேர்வுக் கட்டணம் 100 ரூபாய் செலுத்தினால் போதும் எனவும் அவர் கூறியுள்ளார். இணையதளம் வழியாக விண்ணப்பத்தை பதிவுசெய்த பின் பெறப்படும் செலுத்துச் சீட்டை பயன்படுத்தி, வங்கி கிளைகளிலும், தபால் நிலையங்களிலும் கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
நெட் பேங்கிங் மற்றும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாகவும் கட்டணங்களைச் செலுத்தலாம். இதற்கான முழு விவரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் பார்க்கலாம். இத்தேர்வுகளை, 15 லட்சம் பேர் வரை எழுதலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2,908 மையங்களில் தேர்வு: அதிகபட்சமாக, ஜூலை 7ம் தேதி நடைபெறும் குரூப் - 4க்கான தேர்வு, மாநிலம் முழுவதும் 2,908 மையங்களில் நடைபெறுகின்றன. வழக்கமாக, 300, 400 மையங்களில் தான் தேர்வுகள் நடைபெறும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.