கடந்த 22ம் தேதி நடக்க இருந்த விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வு, மே 13ம் தேதி நடைபெறுகிறது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான போட்டித்தேர்வு, 22ம் தேதி நடக்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக, இத்தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மே 13ம் தேதி காலை 10 மணி முதல், பகல் 1 மணி வரை போட்டித்தேர்வு நடைபெறும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 26 ஆயிரத்து 328 பேர் விண்ணப்பம் செய்தனர்.
உரிய கல்வித்தகுதி இல்லாத 12 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 26 ஆயிரத்து, 316 பேர் தேர்வெழுதுகின்றனர். தேர்வர்களுக்கான, "ஹால் டிக்கெட்", 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்படும் என, தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.