பி.காம்., பி.எல் என்ற புதிய 5 ஆண்டு சட்டப் படிப்பை தொடங்க, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயக்குமார் கூறியதாவது: முதல் முறையாக பி.காம்., பி.எல் என்ற புதிய படிப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான உரிமையும் பெற்றுள்ளோம். இது வெற்றிகரமாக தொடங்கிய பின்னர், பி.டெக்., பி.எல்., பிபிஏ., பி.எல்., போன்ற படிப்புகளையும் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும். இதற்கான சட்ட வல்லுநர்களின் தேவையும் அவசியமாக உள்ளது. இதற்காகவும் சிறந்த வல்லுநர்களை தேடி வருகிறோம். இதுபோன்ற புதிய படிப்புகளை அறிமுகப்படுத்த, சென்னை தரமணியில் 15 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 60 கோடியில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளோம். நிர்வாகப் பிரிவு, நூலகம், விடுதிகள், கணினி மையம் உள்ளிட்ட சிறப்புகளை கொண்ட புதிய வளாகம் அமைக்கப்படும். இதன் மூலம் சட்டப் படிப்புகளை பயில்வோர், நீதிமன்றங்களை தவிர வங்கிகள், தொழில் நிறுவனங்களில் சிறப்பு சட்ட ஆலோசகர்களாக பணியாற்ற முடியும் என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.