Pages

Monday, April 23, 2012

பாரதியார் பல்கலை. பி.எட். நுழைவுத் தேர்வு: 1,591 பேர் எழுதினர்.

மாநிலம் முழுவதும் 9 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழக பி.எட். நுழைவுத் தேர்வை 1,591 பேர் எழுதினர்.
 பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மூலமாக 2012-2013 கல்வி ஆண்டுக்கான பி.எட். நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 மாநிலம் முழுவதும் 9 மையங்களில் நடைபெற்ற இந்த நுழைவுத் தேர்வை 1,591 பேர் எழுதினர்.
 இந்தத் தேர்வில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு தேர்வெழுதினர்.
 கோவை மையத்தில் 185 பேர்: கோவை, வடவள்ளியில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெற்றது.
 இந்த நுழைவுத் தேர்வை பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுவாமிநாதன், தொலைதூரக் கல்வி இயக்குநர் அன்புமணி, தேர்வுக் கட்டுப்பாட்டாளர்
 கே.ஜி. செந்தில்வாசன், பி.எட். நுழைவுத் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சிங்காரவேலு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
 கோவையில் உள்ள மையத்தில் 185 பேர் தேர்வு எழுதினர். சேலத்தில் 400 பேரும், சென்னையில் 250, மதுரையில் 148 பேரும் தேர்வு எழுதினர்.
 மே மாதம் தேர்வு முடிவு: மொத்தம் 500 இடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்பட்டது. நுழைவுத் தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாக, பி.எட். நுழைவுத் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சிங்காரவேலு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.