திண்டுக்கல்: பள்ளிகளில் முப்பருவ தேர்வுமுறையை நடைமுறையாக்கும் பொருட்டு, பள்ளி வேலை நாட்கள் 3 பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய அரசு பொறுப்பேற்றவுடன், கல்லூரிகளில் செமஸ்டர் முறை போல், பள்ளிகளில் முப்பருவ தேர்வு முறையை செயல்படுத்த உத்தரவிட்டது.
இது, வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும். ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை, சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, முப்பருவமுறை குறித்து, சென்னையில் பயிற்சி அளிக்கப்படும்.
ஒரு பாடத்திற்கு, மாவட்டத்திற்கு இருவர் தேர்வு செய்யப்படுவர். இவர்கள், மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர்.
இந்த முப்பருவ தேர்வு முறை நடைமுறைக்கு வருவதையடுத்து, அதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள, பள்ளி வேலை நாட்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி,
* ஜூன் 1 முதல் அக்டோபர் 1 வரை- முதல் பருவம்; மொத்த வேலை நாள்- 81.
* அக்., 3 முதல் டிச., 31 வரை- இரண்டாம் பருவம்; வேலை நாள்- 56.
* ஜன., 1 முதல் ஏப்., 26 வரை- மூன்றாம் பருவம்; வேலை நாள்- 73.
ஒவ்வொரு பருவ முடிவிலும், அதற்கான தேர்வு நடக்கும்.
நன்றி : தினமலர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.