Pages

Saturday, March 24, 2012

கல்வி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு செல்வது வெறும் 6% மட்டுமே...


animated gifடெல்லி: பட்ஜெட்டில் கல்விக்கென்று ஒதுக்கப்படும் நிதியில் 78%, ஆசிரியர்களுக்கும், நிர்வாகத்திற்கும் போக, வெறும் 6% மட்டுமே மாணவர்களுக்கு கிடைக்கிறது.
animated gifபள்ளியின் சுவர்களுக்கு வெள்ளையடித்தல், பள்ளியில் நடைபெறும் விழாக்களுக்கான செலவு என்று கணிசமான நிதி செலவிடப்படுகிறது.

இந்த அதிர்ச்சி தகவல் ஒரு சர்வே மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், நாட்டில், 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், பாதி பேருக்கு மட்டுமே 2ம் வகுப்பு பாடப் புத்தத்தை படிக்க முடிகிறது மற்றும் வெகு சிலரே அடிப்படை Arithmetic பற்றி அறிந்துள்ளார்கள் என்றும் அந்த சர்வே கூறுகிறது.
2009-10 மற்றும் 2011-12 ஆகிய நிதியாண்டுகளுக்கு இடையில், இந்தியாவின் பள்ளிக் கல்விக்கென்று ஒதுக்கப்படும் நிதி, ரூ.26,169 கோடியிலிருந்து, ரூ.55,746 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியா முழுவதும் ஒரு குழந்தைக்கான தனிப்பட்ட ஒதுக்கீடு 2009-10ம் ஆண்டில் ரூ.2004 என்று இருந்தது. அதே தொகை 2011-12ம் நிதியாண்டில் ரூ.4,269 என்று உயர்ந்தது. இவ்வாறு அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.