Pages

Sunday, February 19, 2012

அரசுப் பள்ளிகளில் விரைவில் ஆங்கில வழிக் கல்வி அரசுப் பள்ளிகளில் விரைவில் ஆங்கில வழிக் கல்வி

Bullet-05-june.gif (5925 bytes)அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி துவங்க ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. விரைவில், ஆங்கில வழிக் கல்வி துவங்கி, புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்" என, துவக்கக் கல்வி இயக்குனரக இணை இயக்குனர் ராமராஜ் கூறினார்.
Bullet-05-june.gif (5925 bytes)ஸ்மார்ட் கிளாஸ் உண்டு
பள்ளிகளுக்கு, டிவி, டிவிடி பிளேயர் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, ஆரம்ப நிலையிலேயே ஸ்மார்ட் கிளாஸ் போன்ற கல்வி கற்றுத் தரப்படும். மலைப்பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்து, தரமான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழகத்தில், நடப்பாண்டில் 56 ஆயிரத்து 143 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.
Bullet-05-june.gif (5925 bytes)மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் வகையில், புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி, தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில், தேர்ச்சி அடையும் ஆசிரியர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் பணியமர்த்தப்படுவர்.
மேலும், 810 நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
Bullet-05-june.gif (5925 bytes)அரசு பள்ளிகளில், ஆரம்ப நிலையில் ஆங்கில வழி கல்வியை கொண்டு வருவதற்காக நிபுணர் குழு அமைத்து ஆலோசனை நடத்தப்படுகிறது. விரைவில், நடுநிலைப் பிரிவு போன்று, ஆரம்ப நிலையிலேயே ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டு, தனியார் பள்ளிக்கு இணையாக சீருடை வழங்கப்படும்.
இதன்பொருட்டு, புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இதன்மூலம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். இவ்வாறு, இணை இயக்குனர் ராமராஜ் கூறினார்.
நன்றி-தினமலர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.