Pages

Saturday, February 18, 2012

1,734 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 2 மாதம் ஆகியும் தேர்வு பட்டியல் வெளியாகவில்லை ஆசிரியர் தேர்வு வாரியம் அலட்சியம்

Bullet-05-june.gif (5925 bytes)அரசு பள்ளிக்கூடங்களில் 1,734 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி 2 மாதங்கள் ஆகியும் தேர்வுபட்டியலை வெளியிடாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் இழுத்தடித்து வருகிறது.
Bullet-05-june.gif (5925 bytes)1,734 காலி இடங்கள்
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், 1,734 இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக மாவட்ட கல்வி அலுவலங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் பதிவுமூப்பு அடிப்படையில் ஒரு காலி இடத்திற்கு 5 பேர் என்ற அடிப்படையில் சுமார் 8,700 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 3 மற்றும் 4-ந் தேதியில் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.
Bullet-05-june.gif (5925 bytes)ஆசிரியர் வாரியம் அலட்சியம்
அவர்களில் இருந்து அதிக பதிவுமூப்பு உள்ள 1,734 பேரை தேர்வுசெய்ய வேண்டும். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிடவில்லை. சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றுவந்த ஆசிரியர்கள் எப்போது தேர்வுபட்டியல் வெளியாகும்? பணிநியமன ஆணை கிடைக்கப் பெற்று, எப்போது ஆசிரியர் பணியில் சேரப்போகிறோம்? என்று தவியாய் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் ஏனோ தேர்வு பட்டியலை வெளியிடாமல் காலம்தாழ்த்திக் கொண்டே செல்கிறது. நடப்பு கல்வி ஆண்டில் 56 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சட்டசபையில் அறிவிக்கப்படுகிறது. 2011-2012-ம் கல்வி ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன. ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டதற்கே பணிநியமன ஆணை வழங்கப்படாத நிலையில் இத்தனை ஆயிரம் ஆசிரியர்களை எப்படி நியமிக்கப்போகிறார்கள்? என்பது ஆசிரியர்களின் கேள்வி.
நன்றி : தினத்தந்தி. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.