Pages

Thursday, October 12, 2017

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவை வழங்காமல் ஏமாற்றக் கூடாது

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் உடனடியாக செயல்படுத்தப்படும்  என்று அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் ஊதிய விகிதம் குறித்த குறைகள் களையப்படவில்லை.

பள்ளிக்கல்வி திட்டம்: நாளை ஆலோசனை

பள்ளிக்கல்வி திட்டங்களை அமல்படுத்துவது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, சென்னையில், நாளை ஆலோசனை வழங்கப்படுகிறது. புதிய பாடத்திட்டம், நுழைவுத் தேர்வு பயிற்சி, 'ஸ்மார்ட்' வகுப்பு என, பல்வேறு திட்டங்கள், பள்ளிக்கல்வித் துறையில் அமல்படுத்தப்பட உள்ளன.

நான்கு போட்டி தேர்வுகளுக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியில், 24 காலியிடங்களுக்கு, 2013ல் தேர்வு நடந்தது. இதில், 51 பேருக்கு, வரும், 30ம் தேதி நேர்காணல் நடக்க உள்ளது.

’குரூப் - 1’ முதன்மை தேர்வு; அக்., 13ல் துவக்கம்

துணை கலெக்டர் உட்பட, 85 காலி இடங்களுக்கான, ’குரூப் - 1’ முதன்மை தேர்வு, அக்., 13ல் துவங்குகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள, துணை கலெக்டர், 29; டி.எஸ்.பி., 34; வணிக வரி கமிஷனர், எட்டு; மாவட்ட பதிவாளர், ஒன்று; மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஐந்து மற்றும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி, எட்டு என, மொத்தம், 85 இடங்களுக்கு, குரூப் - 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு, பிப்., 19ல் நடந்தது.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு? விரிவான செய்தி தொகுப்பு.

அலுவலர்கள் குழு 2017-ன் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மத்திய  ஊதியக் குழு  திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் போதெல்லாம், தமிழ்நாடு அரசும் அதே ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது. அதேபோல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும்போது, உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை  வழங்கி வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு!

7-வது ஊதியக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு 20% வரை ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை தமிழக தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் துவங்கியது

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவெடுக்க, தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் துவங்கியது. மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான பரிந்துரைகளை பெறுவதற்காக, 'அலுவலர் குழு' அமைக்கப்பட்டது. இக்குழு, செப்., 27ல், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, அறிக்கை வழங்கியது. 

ஊதிய குழுவின் அறிக்கை - முக்கிய அம்சங்கள்

ஊதிய குழு அளித்துள்ள அறிக்கையில் கீழ் கண்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருப்பதாகவும் இப்பரிந்துரைகள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது.

1) 01.01.16 முதல் ஊதிய உயர்வு முன்தேதியிட்டு வழங்கப்படும்

2) நவம்பர் 2017 முதல் புதிய சம்பளம் வழங்கப்படும்.

Tuesday, October 10, 2017

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியத் திட்டம், அமைச்சரவை ஆலோசனை!

வரும் புதன்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது - 7வதுஊதிய குழு பரிந்துரைகள் தொடர்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமானது தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.

அரசு ஊழியர் ஊதிய உயர்வு : அமைச்சரவை நாளை முடிவு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவெடுக்க, தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை நடைபெற உள்ளது.

Monday, October 9, 2017

பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஆலோசனை!!!


7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி தலைமை செயலகத்தில் தலைமை செயலாளருடன்  ஆலோசனை நடத்தி வருகிறார்.