Pages

Tuesday, May 23, 2017

விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்!


மத்திய அரசின் 7-வது் ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில், `ஊதியக் குழு ஊதிய மாற்றம் - ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு  அனைத்துத் துறைகளில் இருந்தும் விபரம் கோரியுள்ளது. 


அதாவது, "அரசுத் துறைகளில் 01.05.2017 அன்று பணியாற்றுவோர் விபரம், அவர்களின் ஊதிய விபரம், காலிபணியிட விபரம், 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை ஓய்வுபெறுவோர் விபரம், தர ஊதிய அடிப்படையில் வெவ்வேறு நிலைகளில் வீட்டு வாடகை படிபெறுவோர் விபரம்" ஆகியவற்றையும் 30.6.2017-க்குள் கோரியுள்ளது. 

இந்தத் தகவல் கிடைத்த பிறகு, மத்திய அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழுவுக்கு இணையான சம்பளம் தமிழக அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.