Pages

Saturday, May 13, 2017

விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம்

’பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதையடுத்து, விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு நேற்று முதல் விண்ணப்பிக்கலாம்,’ என கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற்றது, இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. வரும் 15ம் தேதி பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து, www.dge.tn.nic.in  என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், 17ம் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமையாசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். 

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாக நேற்று முதல் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல் பெற விரும்புவோர், பகுதி 1 மொழி -550 ரூபாய், பகுதி 2 மொழி (ஆங்கிலம்)- 550 ரூபாய், மற்ற பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) 275 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். 

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பகுதி1 மொழி, பகுதி 2 மொழி மற்றும் உயிரியில் பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா 305 ரூபாயும்; மற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 205 ரூபாயும் செலுத்த வேண்டும்.விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் சீட்டினை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

இதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறு கூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளவும் முடியும். இத்தகவலை, பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.