Pages

Monday, May 8, 2017

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நவீன கழிப்பறைகள்

அரசுப் பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் கட்டித்தர உத்தரவிட்டுள்ளேன் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். வரும் ஜூன் முதல்வாரத்தில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்படுகின்றன.



அதையொட்டி, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் மதுரையில் நடந்தது. இந்த பயிற்சி வகுப்ப்புக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசும்போது, தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசுப் பள்ளிகளையும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்துவேன் எனக் கூறினார்.

மேலும், கிராமப்புற பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நவீன கழிப்பறைகளைக் கட்டித் தர ஏற்பாடு செய்வேன் என செங்கோட்டையன் கூறினார்.
தமிழக அரசுப்பள்ளிகளில்நவீன அக்ழிப்பறைகளைக் கட்டினாலும் அவற்றுக்கு நீர் வசதி செய்து தரப்படாத கரணத்தால் பெரும்பாலான் அபள்ளிகளில் கழிப்பறைகள மூடியே கிடக்கின்றன.
மேலும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய சில பள்ளிகள் மாணவர்களையே பயன்படுத்துகின்றன என்பது துய்ரம் நிறைந்த நடைமுறை.முழுமையான சுகாதரத்தை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.