Pages

Thursday, May 18, 2017

முதல் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு ரூ.6000 நிதி உதவி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.6000 வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இவற்றில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.6000 வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


இந்த தொகை பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மூன்று தவணையாக வழங்கப்படும் இந்த தொகை மகப்பேறு பதிவு செய்தவுடன் 1000 ரூபாயும் இரண்டாவது தவணையாக 6வது மாதத்தில் 2 ஆயிரம் ரூபாயும், குழந்தை பிறந்ததும் மூன்றாவது தவணைத் தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள பெண்களுக்கும் இந்த உதவித் தொகை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்திற்கு  2017 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 31, 2020 வரை மாநில அரசின் பங்கு  உடபட மொத்தம் 12,661 கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அதே காலகட்டத்தில்  மத்திய அரசின் பங்களிப்பு ரூ. 7932 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.