தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய காந்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியன இணைந்து நடத்தும் மழலையர் நலன் மற்றும் பராமரிப்பு கல்வி பட்டயப் படிப்பு பயில்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில் சேர்வதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இதில் இருபாலரும் சேர்த்துக் கொள்ளப்படுவர். அனைத்து வேலை நாள்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அரசு நிர்ணயித்த கட்டணமே வசூலிக்கப்படும். பட்டியல் மாணவ மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இக்கல்வியைப் பயின்றவர்கள் பால்வாடி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றமுடியும். இத்தகவலை பயிற்சி நிறுவன முதல்வர் கே.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 99525-20491.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.