Pages

Tuesday, March 21, 2017

சிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்விலிருந்து விலக்கு?

'டெட் தேர்விலிருந்து, சிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு விலக்களிக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நடந்தது. இது குறித்து, மாநில தலைவர் இளமாறன் கூறியதாவது: அரசு பள்ளிகளில், 2011 டிசம்பரில், 3,200 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்களில், 300 பேர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தோர், கலப்பு திருமணம் செய்தோர் என்ற, சிறப்பு பிரிவுகளில் தேர்வாகினர். இந்த ஆசிரியர்களும், 'டெட்' தேர்வு எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அவர்களுக்கு, தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும். 2004ல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, பணி வரன்முறை பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.