Pages

Tuesday, March 28, 2017

உயர்கல்விக்கு வழிகாட்டும் தினமலர் வழிகாட்டி!

பிளஸ் 2வுக்கு பின், உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என வழிகாட்டும், ’தினமலர் வழிகாட்டி’ நிகழ்ச்சி, ஏப்., 1 முதல் மூன்று நாட்கள் நடக்கிறது

பிளஸ் 2வுக்கு பின், உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என வழிகாட்டும், ’தினமலர் வழிகாட்டி’ நிகழ்ச்சி, ஏப்., 1 முதல் மூன்று நாட்கள் நடக்கிறது. 


இதில், ’நீட்’ தேர்வு சந்தேகங்களுக்கும் விடை அளிக்கப்படும். பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என் பதை விளக்கும் வழிகாட்டி நிகழ்ச்சி, ’தினமலர்’ சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான, தினமலர் வழிகாட்டி, ஏப்ரல், 1, 2 மற்றும் 3ம் தேதிகளில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்கிறது. தினமலர் நாளிதழுடன், எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, இந்த ஆண்டின் ’வழிகாட்டி’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 

பிளஸ் 2வுக்கு பின், உயர்கல்வியை தேர்வு செய்வது குறித்து, ’அப்ளிகேஷன் முதல் அட்மிஷன்’ வரையிலான சந்தேகங்களுக்கு, மாணவர்களும், பெற்றோரும், இதில் விளக்கம் பெறலாம். இதில், 30க்கும் மேற்பட்ட நிபுணர்கள், உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து, ஆலோசனை வழங்க உள்ளனர்.

 நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில், முன்னணி பல்கலைகள் உட்பட, 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. கல்லுாரிகளில் உள்ள படிப்புகள், செலவுகள், அதற்கான தகுதி குறித்து, கல்லுாரி பிரதிநிதிகளிடம், பெற்றோரும், மாணவரும் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம். 

கல்வி கடன் பெறும் வழிகள், அதற்கு விண்ணப்பிக்கும் முறையையும் அறிந்து கொள்ளலாம்.நிகழ்ச்சி நடக்கும் மூன்று நாட்களும், காலை, 10:00 மணி முதல், மாலை, 7:00 மணி வரை, பிரபல கல்வியாளர்கள், கல்வி ஆலோசகர்கள் பங்கேற்கும், வழிகாட்டும் கருத்தரங்கம், ’பேனல் டிஸ்கஷன்’ என்ற, குழு ஆலோசனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதில், அறிவியல், கலை, இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து, துறை சார்ந்த நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர். பாடப் பிரிவுகளின் சிறப்பு அம்சங்கள், வேலை வாய்ப்புகள் குறித்து, மாணவர்கள், பெற்றோர் தெரிந்து கொள்ளலாம். 

சிறந்த கேள்விகளை கேட்கும் மாணவர்கள், ’டேப்லெட்’ மற்றும், ’வாட்ச்’ போன்ற பரிசுகளை வெல்ல வாய்ப்புள்ளது. உயர்கல்வியின் முக்கியத்துவம், அவற்றின் எதிர்காலம், கல்லுாரிகள், பல்கலைகளின் தகவல்கள், எந்த பாடப்பிரிவு, எந்த கல்லுாரியில் உள்ளது, படிப்புக்கேற்ற வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை விளக்கும், தகவல் பெட்டகமான, ’தினமலர்’ வழிகாட்டி புத்தகம், நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களுக்கு, இலவசமாக வழங்கப்படும்.

தினமலர் நாளிதழும், எஸ்.ஆர்.எம்., பல்கலையும் இணைந்து நடத்தும், இந்த வழிகாட்டி நிகழ்ச்சியை, கலசலிங்கம் பல்கலை மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் உடன் வழங்குகின்றன. பெற்றோரும், மாணவர்களும், நிகழ்ச்சியில் பங்கேற்று, உயர்கல்வி குறித்த குழப்பங்களுக்கு விளக்கம் பெறலாம்.

’நீட் வழிகாட்டி  

தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், மருத்துவப் படிப்புகளுக்கு, ’நீட்’ தேர்வு கட்டாயமாகி உள்ளது. மே, 7ல் நடக்கவுள்ள, தேசிய அளவிலான, ’நீட்’ தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவது எப்படி; மருத்துவப் படிப்பில் சேர தயாராவது எப்படி என்பது குறித்த வழிகாட்டுதலும், வழிகாட்டி நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.

எங்கே, எப்போது?

இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை எதிரில்நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரைதேதி: ஏப்., 1, 2 மற்றும் 3ம் தேதி

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.