ஆய்வக உதவியாளர் தேர்வு முடிந்து, இரண்டு ஆண்டுகள் முடியும் நிலையில், முடிவுகள் தாமதமாகி உள்ளன. அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வில் வெற்றி பெறுவோரில், ஒரு இடத்திற்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில், நேர்முக தேர்வு நடத்தப்படும்.
நேர்முக தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, பணி ஒதுக்கப்படும் என, தேர்வுத்துறை அறிவித்திருந்தது. ஆனால், 'எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கிடாமல் தேர்வு நடந்தால், பணி நியமனத்தில் முறைகேடு ஏற்படும்' எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை, நீதிபதி ஹரிபரந்தாமன் விசாரித்து, 2015 ஆக., 7ல் உத்தரவு பிறப்பித்தார். அதில், 'எழுத்து தேர்வு மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வு மதிப்பெண்ணை, மொத்தமாக கணக்கிட்டு, அதன்படி, இறுதி முடிவு அறிவிக்கலாம்' என, தெரிவித்தார்.
இந்த உத்தரவு வெளியாகி, ஒன்றே முக்கால் ஆண்டுகளை தாண்டி விட்டது. ஆனால், இன்னும் தேர்வு முடிவு வெளியாகவில்லை. இதுகுறித்து, அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வர்கள் கூட்டமைப்பினர், பல முறை அரசுக்கு மனு அனுப்பியும், தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், தேர்வு முடிவுகள் மாயமாகி விட்டதாக, துறையில் திடீர் வதந்தி கிளம்பியது; அதை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.