Pages

Friday, March 3, 2017

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

'வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், மாதாந்திர உதவித் தொகை பெற, ஜூன், 6க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. வயது முதிர்த்த தமிழறிஞர்களுக்கு, மாதம், 2,000 ரூபாய் உதவித்தொகையை, தமிழக அரசு வழங்கி வருகிறது. 

விண்ணப்ப படிவத்தை, www.tamilvalarchithurai.org இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை, ஜூன், 6க்குள், சென்னை, எழும்பூர், தமிழ் சாலையில் அமைந்துள்ள, தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு, வாழ்நாள் முழுவதும், மாதம், 2,000 ரூபாய், மருத்துவப்படியாக, 100 ரூபாயுடன், இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.