பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி, கல்வி நிறுவனங்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில், குழந்தைகள் கடத்தல், பாலியல் தொல்லை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதையடுத்து, பள்ளிகளில், குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நர்சரி பள்ளிகளில் படிக்கும், 10 வயதுக்கும் குறைந்த குழந்தைகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும், அவர்களை தனியாக விடக்கூடாது என்றும், பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தனியார் பள்ளிகளில், ஒவ்வொரு வகுப்பிலும் பெற்றோரை அழைத்து, ஆலோசனைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி குழந்தைகளை, பெற்றோரே வந்து அழைத்து செல்ல வேண்டும்; தினமும் ஒரு உறவினர், நண்பர் என, யாரையாவது பள்ளிக்கு அனுப்பி, குழந்தைகளை அழைத்து செல்லக் கூடாது; ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வரும் குழந்தைகள் என்றால், அதன் டிரைவர் பற்றிய முழு தகவலையும், பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் என, பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.