Pages

Wednesday, March 1, 2017

இலவச ’லேப் - டாப்’ இந்த ஆண்டில் இல்லை

பள்ளி மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இலவச, ’லேப் - டாப்’ கிடைக்காது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளில் பயின்ற, 40 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இதுவரை இலவச, லேப் - டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. 


இதற்காக, 4,331 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு துவங்கிய, இந்த முன்னோடி திட்டத்தை, பல மாநிலங் கள் பின்பற்ற துவங்கியுள்ளன. மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும், இலவச லேப் -- டாப் திட்டத்தைத் தொடரப் போவதாக, அ.தி.மு.க., அரசு தெரிவித்தது; சட்டசபையிலும் அறிவிக்கப்பட்டது. 

கோடை விடுமுறை

ஆனால், தகவல் தொழில்நுட்பத் துறை செயலருக்கு, மற்ற துறைகளின் பொறுப்பு தரப்பட்டதால், லேப் - டாப் வழங்கும் பணியில், அவர் தீவிரம் காட்டவில்லை. 

பள்ளி தேர்வுகள் முடிவதற்குள், லேப் - டாப் தந்துவிட்டால், அது, கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க உதவியாக இருக்கும் என, மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அது சாத்தியம் இல்லை என, தற்போது தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது

இரு வாரங்களுக்கு முன் தான், லேப் - டாப் கொள்முதலுக்கான, ’டெண்டர்’ விண்ணப்பங்களை பெறும் தேதி நிறைவடைந்தது. அதை, தற்போது பரிசீலிக்க துவங்கியிருக்கிறோம். இதில், அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. அதனால், தேர்வு துவங்கு வதற்குள், டெண்டரை இறுதி செய்வதற்கு வாய்ப்பு இல்லை. 

அவகாசம் 

அதை இறுதி செய்தாலும், கொள்முதல் செய்ய, அவகாசம் தேவை. பின், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்; அதற்கும் கால அவகாசம் வேண்டும். அதனால், இந்த ஆண்டில் லேப் - டாப் வழங்குவது சிரமம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.