Pages

Monday, March 13, 2017

தமிழக அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 60 ஆகிறது!? ஏற்பாடு தடபுடல்!

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு  பெறும் வயதை 60 ஆக்கப் போராடுகிறாராம் ஒரு அரசு உயர் அதிகாரி. தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசிக் கொண்டார்கள்!



சூரியனின் பெயரை முதலாவதாகக் கொண்ட  அந்த பினான்ஷியல் அடிஷனல் செக்ரடரி… பினான்ஷியல் செக்ரட்ரி சண்முகத்துக்கு ஹை ப்ரஷர் கொடுத்து லெட்டர் போட்டுக்கிறாராம்.

இந்த மாதத்தில் ஐயா ரிட்டயர்ட் ஆவப் போறாராம்… அதுக்குள் முடிச்சிடணும்னு ஏற்பாடு! அதுவும் இந்த பட்ஜெட் செஷனில், இப்போதே அறிவிக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்… இன்னும் நாலைந்து நாளுக்குள் பட்ஜெட் தயாரிப்பில் இதைத்  திணிக்க ஏற்பாடு  நடந்து கொண்டிருக்கிறது… அனேகமாக இந்த பட்ஜெட்டில் இது அறிவிக்கப்படலாம்….

இந்த வருடம் பணி ஓய்வு பெறும் ஒவ்வொருவருக்கும் பணிஓய்வுக் கொடை, இதர பண பலன்கள் என சுமார் 40 லகரத்துக்கு மேல் கொடுக்கவேண்டியிருக்கும் என்று கணக்கெல்லாம் காட்டி…

இப்போதைய நிலையில் அரசு கஜானா நிலை சரியாக இல்லை என்று சாக்கு சொல்லி…

இந்த பணி ஓய்வு வயதை 60ஆக மாற்ற அரசுக்கு பினான்ஷியல் டிபார்ட்மெண்ட் அதிகாரிகள் தரப்பில் இருந்து நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறதாம்…

இதனால் பாதிக்கப்படப் போவது, வேலைவாய்ப்பை எதிர்நோக்கியுள்ள இளைஞர்கள்,

ஏற்கெனவே வேலை பார்க்கும் நடுத்தர வயது நபர்கள்… எல்லாம்தான்!

பார்ப்போம்… என்ன நடக்கிறது என்று!

எல்லாம் அந்த நாராயணனுக்கே வெளிச்சம்!

– தினசரியின் கருடார்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.