Pages

Wednesday, March 15, 2017

பணி நியமன ஆணை 5 மாதமாக காத்திருப்பு

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பணிக்கு, தேர்வு செய்யப்பட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து, ஐந்து மாதங்களாக, பணி நியமன ஆணைக்காக காத்திருக்கின்றனர். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப, 2016 ஜூலையில், விளம்பரம் வெளியிடப்பட்டது.
ஆக., 17ல், போட்டி தேர்வு நடத்தப்பட்டது.தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, நவ., 5ல், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தி முடிக்கப்பட்டது. இப்பணி முடிந்து, ஐந்து மாதங்களாகியும், தேர்வு செய்யப்பட்ட, 119 விரிவுரையாளர்களுக்கு, இன்னமும் நியமன ஆணை வழங்கப்படவில்லை. வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், ஏற்கனவே சுயநிதி கல்லுாரி மற்றும் பள்ளிகளில் செய்து வந்த வேலையை விட்டு விட்டனர். தற்போது, அரசு பணி ஆணையும் கிடைக்காமல், இருந்த வேலையையும் விட்டு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். எனவே, உடனடியாக, பணி நியமன ஆணையை அரசு வழங்க வேண்டும் என, முதல்வர் அலுவலகத்தில், அவர்கள் மனு கொடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.