Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Wednesday, March 1, 2017

  மார்ச் 3-வது வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்? அரசு ஊழியர்கள்ஓய்வு வயது 60 ஆக உயர வாய்ப்பு

  தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் 3-வது வாரத்தில்தாக்கல்செய்யப்படுகிறது. இதில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது 60 ஆகஉயர்த்தப்படும் எனதெரிகிறது. தமிழக சட்டப்பேரவையின்இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர், கடந்த ஜனவரி 23-ம் தேதிதொடங்கியது. அன்று பேரவையில் ஆளுநர்வித்யாசாகர் ராவ்உரை யாற்றினார். பிப்ரவரி 1-ம்தேதிவரை கூட்டத் தொடர் நடந்தது.
  அப்போது முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அதன்பிறகு அதிமுகவில்எழுந்தபிரச்சினைகளால் தமிழக அரசியலில் பரபரப்பும்குழப்பமும் நிலவியது. பின்னர் புதிய முதல்வராகஎடப்பாடிபழனிசாமி கடந்த 16-ம்தேதி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அப்போது, முதல்வரிடமே நிதித்துறை இருந்தது. கடந்த 23-ம்தேதிஅமைச்சரவையில் மாற்றம்செய்யப்பட்டது. முதல்வரிடம்இருந்த நிதித்துறை, மீன்வளத் துறைஅமைச்சர்டி.ஜெயக்குமாரிடம்ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவை யின் பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போதுநடக்கும் என்றஎதிர்பார்ப்பு எழுந்தது. ஜெயக்குமாரிடம்நிதித் துறைஒப்படைக்கப்பட்ட பிறகுபட்ஜெட்தயாரிப்புக்கான பணிகள்முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நிதித்துறைஅதிகாரி ஒருவர் கூறும்போது, ''கடந்த வாரம் துறைகள் வாரியாகமுக்கிய தகவல்கள்பெறப்பட்டன. அவற்றை தொகுத்து முழுமையானபட்ஜெட்தயாரிக்கப்படும். இப்பணிகள் சில தினங்களில் முடியும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்நாள் குறித்து முதல்வர்முடிவு செய்வார். வழக்கமாக மார்ச் இரண்டாம்வாரத்தில்பட்ஜெட் தாக்கல்செய்யப்படும். இந்த ஆண்டு மார்ச் 3-ம்வாரத்தில் தாக்கல் செய்யவாய்ப்புள்ளது'' என்றார். முதல்வர்எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் தனதுஅரசுமீதான பெரும்பான்மையைநிரூபித்து கிடைத்தவாய்ப்பை தக்கவைத்துள்ளார். 500 மதுக்கடைகள்மூடல், பெண்களுக்கு இரு சக்கர வாகனம்வாங்கமானியம், மகப்பேறுஉதவித் தொகை உயர்வு எனபல்வேறுஅறிவிப்புகளைவெளியிட்டுள்ளார். இந்தஅறிவிப்புகளுக்குஅரசாணையும்பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கானநிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்படவேண்டும். மேலும், பல்வேறுதிட்டங்களுக்கான தொடர்நிதியும்ஒதுக்கப்படவேண்டியுள்ளது. மேலும்தற்போதுள்ளஅரசியல் சூழலில், இந்த அரசு மீது மக்களிடையேஅதிருப்தியும் எதிர்ப்பும்உள்ளது. இதைமாற்றுவதற்காகபொதுமக்களைகுறிப்பாக பெண் களை கவரும்வகையில், பல்வேறு புதியதிட்டங்களை அறிவிக்கவேண்டியஅவசியமும் எடப்பாடிபழனிசாமி அரசுக்குஏற்பட்டுள்ளது. ஓய்வு வயதுஉயர்வு இந்த பட்ஜெட்டில் அரசுஊழியர்களுக்கான ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆகஉயர்த்தும்அறிவிப்பு வெளியாகும் எனதெரிகிறது. இதுதொடர்பாக, அரசுஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியுள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் 7-வதுஊதியக்குழு பரிந்துரைஊதியத்தை நம்பியுள்ளனர். இதைநிர்ணயிக்க குழுஅமைக்கப்பட்டுள்ளது. குழுவின்பரிந்துரையை ஏற்றுசெயல்படுத்தினாலும், அடுத்த 4 மாதங்களில் ரூ.15 ஆயிரம் கோடிஅளவுக்கு அரசுக்குநிதிதேவைப்படும். ஏற்கெனவே தமிழகஅரசுத்துறைகளில் 3.5 லட்சம்காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை நிரப்பப்படாத சூழலில், தமிழக அரசின் இந்தமுடிவுபல்வேறு குழப்பங்களைஏற்படுத்தும் என அரசுஊழியர்கள்தரப்பில்கூறப்படுகிறது. இது தொடர்பாகஊழியர் சங்கநிர்வாகி ஒருவர்கூறியதாவது: மத்திய அரசுஓய்வுபெறும்வயதை கடந்த 1998-ல் 60 ஆக உயர்த்தியது. இதைத்தொடர்ந்து தமிழக அரசும்உயர்த்த உள்ளதாகபலமுறைகூறப்பட்டது. ஆனால், உயர்த்தவில்லை. தற்போதுஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தும்அறிவிப்புபட்ஜெட்டில் இடம் பெறும்என தகவல் கசிந்துள்ளது. இதுஓய்வு வயதைநெருங்குபவர்களுக்கு மகிழ்ச்சிஅளிக்கும். அவர்கள்ஆதரிப்பார்கள். அதே நேரம் வயதுஉச்சவரம்பைநெருங்கி அரசுப்பணிக்கு விண்ணப்பித்துகாத்திருக்கும்இளைஞர்களுக்குபாதகமான முடிவாகும். வரும் 2018 முதல் 2020 வரை சுமார் 2.5 லட்சம்பேர் வரை பணிமூப்பால் ஓய்வுபெறவுள்ளனர். இவர்களுக்கு 2 ஆண்டுகள்நீட்டிப்பதன் மூலம், அரசுக்கு ஒரு மடங்கு கூடுதல்செலவுஏற்படும். மேலும், வரும்ஆண்டுகளில் பணியாளர்தேர்வும்நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இது இளைஞர்களுக்குகிடைக்கும்வாய்ப்பை மறுப்பதாகும். எனவே, இந்தமுடிவை அரசு பரிசீலிக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  No comments: