Pages

Wednesday, March 8, 2017

ஆங்கிலம் 2ம் தாளில் முழு மதிப்பெண் கிடைக்கும்!

’ஆங்கிலம் இரண்டாம் தாள் ’ஈஸி’யாக இருந்ததால், முழு மதிப்பெண் கிடைக்கும்,’ என மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு நடந்து வருகிறது. இதில், நேற்று ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது.


சுபஸ்ரீ: ஆங்கிலம் இரண்டாம் தாள் இந்தளவு எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. அனைத்து வினாக்களுக்கும் விடையளித்துள்ளேன். முழு மதிப்பெண் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது.

சஞ்சுஸ்ரீ: ஒரு மதிப்பெண் என அனைத்து வினாக்களும் எளிதாக இருந்தது. திருப்புதல் தேர்வு, அரையாண்டு தேர்வு என தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் மீண்டும் கேட்கப்பட்டிருந்தன.

வெண்ணிலா: ஆங்கிலம் முதல் தாளை விட இரண்டாம் தாள் எளிமையாக இருந்தது. தெரிந்த வினாக்கள் வந்ததால், மகிழ்ச்சியுடன் தேர்வெழுதியுள்ளோம்.

சூர்யபிரகாஷ்: ஆங்கிலம் இரண்டாம் தாள் ’ஈஸி’யாக இருந்தது. திரும்ப, திரும்ப படித்து பயிற்சி பெற்றதால் பொதுத்தேர்வில் வினாக்களுக்கு மகிழ்ச்சியாக எழுதினோம். ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது.

ப்ரித்தியம்ஜெய்: ஆங்கிலம் இரண்டாம் தாளில், 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற முடியும் என எதிர்பார்க்கிறேன். படித்தது வந்ததால், மகிழ்ச்சியாக தேர்வெழுதியுள்ளோம்.

வால்பாறை

ஸ்னேகா: எதிர்பார்த்தது போல தேர்வு ரொம்ப ஈசியாக இருந்தது. கடந்த ஆண்டுபொதுத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் இந்த ஆண்டு கேட்கப்பட்டதால் தேர்வு எளிதாக இருந்தது.

ஸ்நேகப்பிரியா: பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லித்தந்த பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால் விரைவாகவும், தெளிவாகவும் பொறுமையாகவும் தேர்வுவை எழுதினோம்.

ஸ்ரேயா: ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு எதிர்பார்த்தது போல மிகவும் ஈசியான கேள்விகள் கேட்கப்பட்டதால் நல்லமுறையில் தேர்வு எழுதியுள்ளேன்.

வனஜா: ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வை பொறுத்தவரை அனைத்து கேள்விகளும் மிகவும் ஈசியாகவே இருந்தது. படித்த பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால் தேர்வை மகிழ்ச்சியாக எழுதினேன்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.