Pages

Wednesday, March 1, 2017

நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (மார்ச் 2) பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. நாளை துவங்கி மார்ச் 31 ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. மொத்தம் 2,472 தேர்வு மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன. 8 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னை அருகம்பாக்கம் அரசு பள்ளியில் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.


பாட திட்டம்மாற்றம்?
தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மையங்கள் செயல்படுத்தப்படும். தனியாருடன் இணைந்து மருத்துவம், பொறியியல் படிப்பு பயிற்சி செயல்படுத்தப்படும். பிளஸ் 2 தேர்வு பாடதிட்டங்களை மாற்றுவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.