Pages

Friday, March 3, 2017

பிளஸ் 2 தேர்வு துவங்கியது : அரசு பள்ளி தேர்ச்சி அதிகரிக்குமா?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு துவங்கியது. 'இந்த ஆண்டு, அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெறுவர்' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.பிளஸ் 2 தேர்வில், ஒன்பது லட்சத்து, 33 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

சென்னையில், 407 உட்பட மொத்தம், 2,434 மையங்களில் தேர்வு நடந்தது. அனைத்து மையங்களிலும், மாணவ, மாணவியர், காலை, 9:00 மணிக்கே வரவழைக்கப்பட்டனர்; முதலில், பிரார்த்தனை நடந்தது. பின், தேர்வு நடைமுறைகள் குறித்து, மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்வு துவங்கியதும், மாணவர்கள் முன்னிலையில், வினாத்தாள் கட்டு, 'சீல்' உடைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. நேற்று, மொழி பாடத்திற்கான முதல் தாள் தேர்வு நடந்தது. அதாவது, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, பிரெஞ்ச், மலையாளம், ஹிந்தி, உருது, அரபிக், சமஸ்கிருதம் மற்றும் ஜெர்மன் ஆகிய, 10 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு பணிகளை, அமைச்சர் செங்கோட்டையன், செயலர் சபிதா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அப்போது, அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ''பிளஸ் 2 தேர்வில், மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெறுவர்,'' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.