Pages

Wednesday, March 15, 2017

'ஆங்கில தேர்விலும் மதிப்பெண் அள்ளலாம்' : 10ம் வகுப்பு மாணவர் மகிழ்ச்சி

'தமிழ்த் தேர்வைப் போலவே ஆங்கில முதல்தாள் தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெறுவது உறுதி' என, 10ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். திண்டுக்கல்லில் மாணவர்கள் கூறியதாவது: பி.அருண்அஸ்வந்த் (எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி): ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. 'இ- பிரிவில் 51வது வினாவில் 'ஏ' வினாவிற்கு 'எஷன்ஷியல்' என்ற வார்த்தைக்கு ஒரே மாதிரியான பொருள்படும்படி 3 விடைகள் கொடுத்திருந்தது மாணவர்களை சிரமப்படுத்தியது. அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

எம்.பாண்டீஸ்வரி (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்): கடந்தாண்டு வந்த கேள்விகள், 'ப்ளூ பிரின்ட்' படி பாடங்களை படித்ததால் விடையளிக்க எளிதாக இருந்தது. அரசு பள்ளி மாணவர்களை சிரமப்படுத்துவதாக, 'படம் பார்த்து விடையளி' பகுதியில் 53வது வினா இடம் பெற்றிருந்தது. அதேசமயம், 'கரகாட்டம்' குறித்தது என்பதால் எளிதாக விடையளிக்க முடிந்தது. மொத்தத்தில் அரசு பள்ளி மாணவர்களும் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெறலாம்.
டி.ஆனந்தவினிதா,(புனித வளனார் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்): ஒரு மதிப்பெண் வினாக்கள் விடையளிக்க எளிதாக அமைந்திருந்தன. 'எதிர்ச்சொல், பிரதிபெயர் சொல்' பகுதி வினாக்கள், கோடிட்ட இடங்களை நிரப்புக பகுதி, இலக்கணப்பகுதி வினாக்கள் எல்லாம் எளிமையே. முறையான பயிற்சியும், முந்தைய பொதுத் தேர்வு வினா வங்கியை படித்ததும் மிகவும் உதவியது.
டி.எல்.அழகுமீனாள் (ஆங்கில ஆசிரியை, புனித வளனார் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்): தேர்வில் எந்த வினாவும் சிரமமாக இருக்காது. ஏனெனில், ப்ளு பிரிண்ட், வினா வங்கி, புத்தகத்தில் உள்ள பாடங்களில் இல்லாத எதுவும் இடம் பெறவில்லை. மாணவர்களின் மனத்திறன், மொழி ஆளுமை திறனை சோதிக்கவே 'மொழிப் பயன்பாடு' பிரிவில் 'எஷன்ஷியல்' என்பதற்கு 3 பொருள் தரும் விடை அளிக்கப்பட்டுள்ளது. 
இறுதியாக கரகாட்டம் குறித்த வினாவிற்கு மாணவர்களால் எளிதாக விடையளிக்க முடியும். அதனால் சாதாரண மாணவரும் அதிக மதிப்பெண்களை அள்ளுவது உறுதி, என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.