Pages

Tuesday, February 14, 2017

தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கு ’கோல்டன்’ வாய்ப்பு கிடைக்குமா!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 25வது பட்டமளிப்பு விழாவையொட்டி, செமஸ்டர் தேர்வுகளில் தோல்வியடைந்த அனைவருக்கும் ஒரு ’கோல்டன்’ வாய்ப்பினை அளிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


புதுச்சேரி பல்கலைக்கழகம் பாடத்திட்டங்களை வகுத்து, தனது இணைப்பு கல்லுாரிகளுக்கு செமஸ்டர் முறையில் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

பொதுவாக எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் 5 ஆண்டிற்குள் ளும், இன்ஜினியரிங் மாணவர் கள் 4 ஆண்டிலும், கலை அறிவி யல் மாணவர்கள் 3 ஆண்டிலும் படிப்பினை முடிக்க வேண்டும்.

படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் குறிப்பிட்ட ஆண்டிற்குள் முடிப்பதில்லை. இவர்கள் தோல்வியடைந்த பாடங்களில் வெற்றிபெற அடுத்தடுத்த சில வாய்ப்புகள் தரப்படுகின்றன. ஆனாலும் ஒரு சில மாணவர்கள் படிப்பை முழுமையாக முடிப்பதில்லை.

இது போன்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் தற்போது முழுவதுமாக வாய்ப்பு கதவை மூடிவிட்டது. தோல்வியடைந்த பாடங்களை எழுத வாய்ப்பு அளிப்பதில்லை.

2003ம் ஆண்டு முதல் பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கு முந்தைய மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு எழுதும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

திருப்புமுனை

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 300 சதவீத வளர்ச்சிக்கு வித்திட்ட துணைவேந்தர் தரீன் பதவி காலத்திலும் இதுபோன்ற பிரச்னை தலை துாக்கியது. அப்போது அகடமி கவுன்சிலை கூட்டி கருத்தினை கேட்ட துணைவேந்தர், புதுச்சேரி பல்கலைக்கழகம் ஆரம்பித்த காலத்தில் இருந்து படித்த மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதும் வகையில் ஒரு ’கோல்டன்’ வாய்ப்பினை அளித்தார்.

இதனை கெட்டியாக பிடித்துக்கொண்ட 7,500க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் புது பாடத்திட்டத்தின் படி தேர்வு எழுதி, படிப்பினை முடித்து பட்டம் பெற்றனர். வேலையில் இருந்தவர்களுக்கு இது அடுத்த கட்டத்திற்கு செல்ல பிரகாசமான வழியினை ஏற்படுத்தி கொடுத்தது.

அதுபோன்ற ஒரு ’கோல்டன்’ வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா என, தற்போது ஆயிரக்கணக்கானோர் எதிர்நோக்கியுள்ளனர். பலர் மனு கொடுத்த போதும் இது குறித்து முடிவை அறிவிக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் மவுனம் சாதித்து வருகிறது.

எந்த வித கல்வி சூழலும் இல்லாமல் கிராமப்புறங்களில் இருந்து முதல் தலைமுறையாக படிக்க வந்துள்ள மாணவர்கள் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைவது இயல்பு.அதற்காக அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் தராமல் முழுமையாக மறுப்பது, பல ஆயிரக் கணக்கானவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிடும்.

புதுச்சேரி பல்கலைக்கழகத் தின் 25வது பட்டமளிப்பு விழா விரைவில் வர உள்ளது. இதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், புதுச்சேரி பல்கலைக்கழகம் ஆரம்பித்த காலத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கு மீண் டும் ஒரு ’பொன்னான’ வாய்ப்பு அளிக்க அகடமி கவுன்சிலை அவசரமாக கூட்டி பல்கலைக்கழக துணைவேந்தர் முடிவெடுக்க வேண்டும்.

இந்த ’கோல்டன்’ வாய்ப்பு, பல ஆயிரம் மருத்துவர்கள், இன்ஜியர்கள், கலை அறிவியல் மாணவர்கள் பலருக்கும் வாழ்வில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்துவதோடு, உயர் கல்வி வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும்.

நிதி நெருக்கடி வருமா?

புதுச்சேரி பல்கலைக்கழகம் 1985ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆண்டில் இருந்தே இந்த கடைசி வாய்ப்பினை அளிக்கலாம். புது பாட திட்டத்தின் படியே இவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்பதால் புதிதாக எந்த செலவும் இருக்கபோவதில்லை.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.